சென்னை மெட்ரோ நிர்வாகம் சமூக வலைத்தளங்களில் ஒரு கேள்வியைக் கேட்டிருந்தது.
‘ஒவ்வொரு பயணிக்கும் ஒரு விருப்பம் உண்டு;
ஒவ்வொரு பயணத்துக்கும் ஒரு கனவு உண்டு!’
‘மெட்ரோ ரயிலுக்காக ஒரு வரம் கேட்கும் வாய்ப்பு கிடைத்தால் நீங்கள் என்ன கேட்பீர்கள்?’
அன்றாடம் செல்லும் கட்டாயப் பயணங்களில் கனவு காண்பதற்கான சாத்தியங்கள் குறைவு. இருபத்து நான்கு மணிநேரமும் மெட்ரோவை ஓட விடுங்கள், பெட்டிக்குள் சார்ஜ் போடும் மின்னமைப்பு வசதியைக் கொண்டு வாருங்கள், கூடுதல் பெட்டிகளைச் சேருங்கள் என்பது போன்ற நடைமுறைப் பயன்பாட்டு வரங்களே அதிகளவில் கேட்கப்பட்டு இருந்தன.
















மெட்ரோ தொடர் இறுதி நிறுத்தத்தில் நின்றுவிட்டது.
பலவிதமான மெட்ரோ அனுபவங்களை சுவைபட வாசகர்களுக்கு வழங்கிய தொடர்.
நான் கல்லுரியில் படித்த நான்கு ஆண்டுகளும் இரயிலில் சென்று படித்ததால் அத்தை பாட்டியின் கரி என்ஜின் அனுபவம் நினைவுக்கு வந்தது. கரி என்ஜின் இரயில், டீசல் என்ஜின் ரயில், மின்சார ரயில் இவற்றில் பயணம் செய்தாலும் இன்னும் மெட்ரோவில் பயணம் செய்யாத குறை எனக்கும் உண்டு. மெட்ராஸ் பேப்பர் விழாவுக்கு வந்த போது அதை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று நினைத்தேன். பக்கத்தில்தான் மெட்ரோ நிறுத்தம். மனம் மாறி வாடகைக்காரில் சென்றுவிட்டேன். ஆனாலும்
ஆசை அப்படியே இருக்கிறது. தொடர் முழுவதும் சிறப்பாக இருந்தது.