Home » வரலாற்றின் மிக மோசமான ஆண்டு
நம் குரல்

வரலாற்றின் மிக மோசமான ஆண்டு

இவ்வாண்டும் மத்தியக் கிழக்கைப் போர்களும் படுகொலைகளும் பஞ்சங்களும் ஆட்டிப் படைத்தன. ஒட்டுமொத்த உலகமும் கண்டித்தும் கேளாமல் காஸாவில் லட்சக்கணக்கானோரைக் கொன்றது இஸ்ரேல். கூடவே இரான், லெபனான், சிரியா, ஏமன் போன்ற  நாடுகளையும் போரின் பிடியிலேயே வைத்திருந்தது.

2023 அக்டோபர் 7ஆம் தேதி தொடங்கிய இஸ்ரேல்-ஹமாஸ் யுத்தம், இவ்வாண்டின் தொடக்கத்தில் 42 நாட்கள் போர் நிறுத்தம் ஏற்பட்டு சற்று ஓய்ந்திருந்தது. அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று, இருதரப்பிலும் சில பணயக் கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.

ஆனால் மார்ச் மாதம் இந்தப் போர் நிறுத்தத்தை முறித்துக் கொண்டு மீண்டும் தனது தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல். ஹமாஸ் குழுவினர் மீண்டும் பலம் பெற்றுவிடாமல் தடுப்பதற்காகவே போர் நிறுத்தத்தை மீறியதாகக் காரணம் கூறியது.

அப்போது தொடங்கிய இஸ்ரேலின் கொடூரத் தாக்குதல்கள் கிட்டத்தட்ட ஏழு மாதங்கள் காஸாவில் வசிக்கும் லட்சக்கணக்கான பாலஸ்தீனர்களைக் கொத்துக் கொத்தாகக் கொன்றழித்தன. பல லட்சம் பேர் படுகாயமடைந்தனர். ஏறக்குறைய ஒட்டுமொத்த காஸாவின் இருபது லட்சம் மக்கள்தொகையும் தங்கள் இருப்பிடங்களை விட்டு அகதி முகாம்களுக்கு இடம்பெயரும் அவலநிலை ஏற்பட்டது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!