Home » ஒரு குடும்பக் கதை – 162
குடும்பக் கதை தொடர்கள்

ஒரு குடும்பக் கதை – 162

162. தலை நிமிர்ந்த நீதித்துறை

1975 ஜூன் 12. அன்றைய பொழுது இந்திரா காந்தியைப் பொறுத்தவரை நல்லபடியாக விடியவில்லை.

அன்று காலை தீர்ப்பு குறித்த டென்ஷனுடன் வீட்டில் தன் அறையில் அமர்ந்து காலைச் சிற்றுண்டி சாப்பிட்டுக் கொண்டிருந்தார் இந்திரா காந்தி. அப்போது அவரது அறையின் கதவைத் தட்டிவிட்டு உள்ளே நுழைந்தார் அவரது செயலாளர் ஆர்.கே.தவான்.

அவர் சொன்ன சேதி கேட்டு இந்திரா காந்தி பெரும் சோகத்தில் ஆழ்ந்தார். அவரது நம்பிக்கைக்குரிய ஆலோசகராக இருந்த காஷ்மீரைச் சேர்ந்த டி.பி.தர் என்கிற துர்கா பிரசாத் தர் இறந்துவிட்டார் என்பதே அந்தச் செய்தி.

இதயக் கோளாறு காரணமாக பேஸ் மேக்கர் பொருத்துவதற்காக அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் அந்த அறுவைச் சிகிச்சைக்கு முன்பாகவே ஹார்ட் அட்டாக் காரணமாக அவர் மரணம் அடைந்தார்.

உடனடியாக ஆஸ்பத்திரிக்குச் சென்று தர் குடும்பத்தினரைச் சந்தித்து துக்கம் விசாரித்துவிட்டு, ஆறுதல் கூறிவிட்டு வந்தார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!