Home » ஷாப்பிங் அசிஸ்டெண்ட் பில் கேட்ஸ்
அறிவியல்-தொழில்நுட்பம்

ஷாப்பிங் அசிஸ்டெண்ட் பில் கேட்ஸ்

பில் கேட்ஸ் - ஃபோபி கேட்ஸ்

புதிதாக வந்திருக்கும் ஒரு செயலியைப் பயன்படுத்தும்போது உங்களுக்கு உதவி தேவைப்படுகிறது. உதவி கோரினால் மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸே நேரடியாகப் பதிலளிக்கிறார் என்றால் சந்தேகமே வேண்டாம். நீங்கள் தரவிறக்கியது ஃபியா (Phia) ஃபேஷன் செயலியாக இருந்தால், அது பில் கேட்ஸ்தான்.

சமீபத்தில் அவர் வெளியிட்ட ஒரு வீடியோவில் தனது இளைய மகள் ஃபோபி கேட்ஸ் (Phoebe Gates), மகளின் நண்பர் சோஃபியா கியானி (Sophia Kianni) இருவரும் சேர்ந்து ஃபியா (Phia) என்ற நிறுவனத்தைத் தொடங்கியிருக்கிறார்கள் என்று அறிவித்தார். அதோடு, ஆடையலங்காரச் செயலியான ஃபியாவில் நானும் ஒரு பயனர் உதவியாளராக இருக்கிறேன் என்றும் சொன்னார்.

ஃபியா அப்படி என்ன செய்யும் என்று பார்க்கலாம்.

ஃபியாவை இயக்கிய பிறகு, கூகுள் குரோமில் ஓர் ஆடையைத் தேடிப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அந்த அழகிய வெள்ளை நிறக் குட்டைப் பாவாடையின் விலை ஐந்நூறு அமெரிக்க டாலர். பின்னணியில் இயங்கி இதைக் கவனித்துக் கொண்டிருக்கும் ஃபியா. அதே ஆடை, அதே டிசைனில் இணையத்தில் வேறு எங்கெல்லாம் அதைவிடக் குறைந்த விலையில் கிடைக்கிறது என்பதைக் கண்டறிந்து அதன் விவரங்களை உடனடியாக வழங்கும்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!