60 மொழி இன்னும் இரண்டொரு நாட்களில் குஜராத் வந்துவிடும் எனும்போதே அஹூஜாவை கையில் பிடிக்கமுடியவில்லை. நடுத்தர வயதைத் தாண்டியவர்போலத் தொற்றமளிப்பவர்போய் இப்படிக் குதிப்பதைப் பார்க்க எரிச்சலாய் வந்தது. எரிச்சலுக்கு முக்கியக் காரணம், கண்ணில் படும்போதெல்லாம் இவனுக்கு இந்தி தெரியவில்லை என்பதால்...
Tag - தொடரும்
மீண்டும் கைது தன் மீதான உரிமை மீறல் பிரச்சினைக்குப் பதிலளித்துப் பேசுகையில், தன்னைப் பழிவாங்குவது மட்டுமே ஜனதா அரசாங்கத்தின் ஒரே லட்சியம் என்று ஜனதா ஆட்சியாளர்களைப் போட்டுத் தாக்கினார் இந்திரா காந்தி. இதற்கு முன்பு தன்னைக் கைது செய்த சமயத்தில் மாஜிஸ்டிரேட் நிபந்தனையின்றி விடுவித்தபோது...
ரத்தம் சிந்தாத போர் 2014 பிப்ரவரியில் ரஷ்யாவின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டப்பட்டது. ‘இதற்கு மேலும் கிரீமியாவைப் பற்றி முடிவெடுக்காமல் இருக்க முடியாது. அரசாங்கமின்றி உக்ரைன் குழப்பத்தில் தவிக்கிறது. இப்போதாவது கிரீமியாவைத் திரும்ப எடுத்துக் கொள்வோம்’ என்ற முடிவை அறிவித்தார் புதின்...
பித்தா… மேடைக்கு வந்தார் ஜாப்ஸ். வழக்கத்தை விட மெதுவான நடை. மெலிந்த தேகம். ஜாப்ஸைப் பார்த்தவுடன் அரங்கமே எழுந்து நின்றது. தங்கள் அன்பைக் கரவொலியாக மாற்றினர். ‘இது எனக்கு இதமாக இருக்கிறது’ என்றார் ஜாப்ஸ். இன்னும் ஓர் அறிமுக விழா. இம்முறை ஐ-கிளவுட். ஆப்பிளர்களால் பெரிதும்...
விலகவில்லை என்றால் விரட்டியடி 20-பிப்ரவரி-2014. கீவ், உக்ரைன். முந்நூறு ஏக்கர் பரப்பளவு கொண்ட மாளிகையில் உக்ரைன் பிரதமர் விக்டர் யனுகோவிச் தனித்து விடப்பட்டிருந்தார். இன்னும் சில மணிநேரங்களில் புரட்சியாளர்கள் அதைக் கைப்பற்றிவிடுவார்கள். ஏற்கெனவே கையில் கிடைத்த ஆவணங்களைச் சாக்கில் மூட்டையாகக் கட்டி...
59 அவரவர் உலகம் கிடைத்த சைக்கிளைத் தனக்குத் தகுந்தாற்போல ஆக்கிக்கொண்டு என்னதான் சந்தோரில் இரவு ஓட்டிப் பார்த்துக்கொண்டாலும் காலையில் திரும்பவும் எல்லோருடனும் ரேலியில் மாலேகான் போவதற்கு முன், இடையில் பதினைந்து நாட்கள் சைக்கிள் ஓட்டாமல் இருந்துவிட்டதில் உள்ளூரக் கொஞ்சம் உதறலாகத்தான் இருந்தது...
201. சிக்மகளூர் வெற்றி கர்நாடகாவின் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள சிறிய நகரம் சிக்மகளூர். அங்கே காபித் தோட்டங்கள் மிகுதி. சிக்மகளூர் காபிக்குத் தனிச்சுவையும் மணமும் உண்டு. சிக்மகளூர் இந்திரா காந்தி போட்டியிடுவதற்கு ஏற்ற தொகுதி என முடிவெடுத்ததற்குச் சில முக்கியமான காரணங்கள் இருந்தன...
ரஜினி அரசியல் கூட்டணி அரசியலைப் பேசும்போது அரசியல் கட்சிகளைப் பற்றி மட்டுமல்லாது வாக்குகளைப் பாதிக்கும் ரஜினி போன்ற தனி மனிதர்களைப் பற்றியும் பேசியாக வேண்டும். ஐம்பதாண்டுகளுக்கும் மேலாகத் தமிழ்த் திரையுலகில் தனக்கென தனி இடத்தைப் பிடித்து இன்றைக்கும் உச்சத்திலிருப்பவர் நடிகர் ரஜினிகாந்த்...
உழைப்பும் ஓர் ஒழுக்கமே நோவா அகர்யோவா, மாஸ்கோ, ரஷ்யா. காஷாவுடன் தொடங்குகிறது அதிபர் புதினின் காலை. புரதம் நிறைந்த சிறு தானியங்களாலான கஞ்சிதான் இந்த காஷா. ரஷ்யர்களின் பிரதான உணவு. ஒருசில நாள்களில் அவருக்குப் பிடித்தமான காடை முட்டைகளாலான ஆம்லெட்டும், மென்மையான பாலாடைக்கட்டியும் பழச்சாறும் சாப்பிடுவார்...
58 மறுப்பும் இருப்பும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அழுதுகொண்டிருந்தவளை இரண்டு மூன்று பெண்கள் கைதாங்கலாக அணைத்தபடி அழைத்துச் சென்றபின், என்ன ஆயிற்று, சுஜாதா ஏன் இந்த அளவுக்கு அழவேண்டும் என்கிற குறுகுறுப்பில் படிகளை இரண்டிரண்டாகத் தாவி மாடிக்குப் போனான். மதியம் பார்த்த அதே மாடிதான்...













