Home » ஏஐ » Page 2

Tag - ஏஐ

முகங்கள்

தந்தைக்குச் சம்பளம் கொடுக்கும் மகன்

பெரும்பாலான மாணவர்கள் கல்லூரி வாழ்க்கை, இன்ஸ்டாக்ராம் ரீல்ஸ் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருக்கும் வயதில், ரவுல் ஜான் அஜூ தொழில்நுட்ப நிறுவனத்தை நடத்தி வருகிறார். செயற்கை நுண்ணறிவுக் கருவிகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறார். அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை ஆயிரக்கணக்கானவர்களுக்குக் கற்பிக்கிறார்...

Read More
தொடர்கள் • நல்லது கெட்டது

நல்லது கெட்டது – 3

கட்டளையே கட்டளைக் கல் வீட்டில் இன்று என்ன சமைக்க வேண்டும்? கேளு சாட்ஜிபிடியை. இந்தத் திரைப்படத்துக்குப் போகலாமா வேண்டாமா? கேளு ஜெமினியை. தேர்வுக்கு எந்தப் பாடங்களை மட்டும் படிக்க வேண்டும்? கேளு கிளாடை. இப்படி எதற்கெடுத்தாலும் இன்று ஏஐயைக் கேட்பது வழக்கமாகி வருகிறது. தரவுகளைத் திரட்டுவதிலேயே பல...

Read More
தொடர்கள் • நல்லது கெட்டது

நல்லது கெட்டது – 2

Terms & Conditions இன்று எல்லோருமே இணைய வணிகச் செயலிகளைக் கொண்டு வீட்டுக்குப் பொருட்களையோ சாப்பாட்டையோ அடிக்கடி வாங்குகிறோம். ஆனால் அந்தச் சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் எந்த அளவு வாடிக்கையாளர் நலனில் அக்கறையாக இருக்கின்றன? இதை அறிந்துகொள்ள அந்தந்தச் செயலிகளின் பயன்பாட்டு விதிமுறைகளை (Terms &...

Read More
தொடர்கள் • நல்லது கெட்டது

நல்லது கெட்டது – 1 (புதிய தொடர்)

திருடனா, போலிஸா? சீனா உள்பட, உலகம் முழுவதிலும் இருந்து செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மாதிரிகளை (மாடல்களை) தரவிறக்க, சோதனை செய்ய, அவற்றைப் பற்றிக் கலந்துரையாட உதவும் தளம் ஹக்கிங் ஃபேஸ் (Hugging Face). திறந்த மூலமாக (ஓபன் சோர்ஸ்) கிடைக்கும் செய்யறிவு மாதிரிகளின் களஞ்சியம் என்றும் இதனைச் சொல்லலாம்...

Read More
கணினி

சிந்தனை செய் ஏஐயே!

நாம் சிந்தனையைக் கடன் வாங்குகிறோமா? ஆம் என்று MIT போன்ற உலகின் முன்னணிப் பல்கலைக்கழக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உலகின் முக்கியப் பத்திரிகைகள் இதைச் சுட்டிக்காட்டிப் பேச ஆரம்பித்திருக்கின்றன. முதலில் இணையம் வந்தபோதும் இந்தக் குற்றச்சாட்டு சொல்லப்பட்டது. அதன் பின்னர் கூகுள் போன்ற தேடுபொறிகள் தோன்றின...

Read More
கணினி

ஏஐ சுயராஜ்ஜியம்

ஏஐயின் பயன்பாடு பெருகி வருகிறது. அனைத்துத் துறைகளிலும். ஆயினும் ஒரு சிக்கல். ஏஐ இலவசம் அல்ல. யானை வளர்ப்பைப் போல் ஆகியுள்ளது ஏஐ பயன்பாடு. நிறுவனங்களைப் பொறுத்தவரை இது ஒரு பேரின்னல். மாதந்தோறும் ஏஐ செலவு. இது ஓர் எல்லையை மீறிச் சென்றுகொண்டிருக்கிறது. சரி, என்னதான் தீர்வு? ஏஐயைத் துரத்திவிடலாமா...

Read More
அறிவியல்-தொழில்நுட்பம்

டேட்டா சம்ஹாரம்

ஏஐ ஒரு பணியாள். நாம் அதற்கிடும் கட்டளைகளை ‘செவ்வனே’ செய்து முடிக்கும். ஆனால் ஒரே ஒரு சிக்கல். கட்டளைகளில் அணுவளவும் குழப்பம் கூடாது. இரட்டுற மொழிதல் எல்லாம் கவிதையோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். ஏஐயிடம் ஆகாது. இன்றைய சாஃப்ட்வேர் டீம்களில் மனிதர்களோடு சேர்ந்து ஏஐயும் உழைக்கிறது. அதாவது...

Read More
சமூகம்

படுக்கை அறையில் நுழைய விடாதீர்கள்!

அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் தொட்டதற்கெல்லாம் சாட்ஜிபிடியை நாடுவது அதிகரித்துள்ளது. துணைக்காகவும் ஆலோசனைக்காகவும், இன்னும் ஒருபடி மேலே போய் நெருக்கத்தை வேண்டியும் சாட்ஜிபிடியைப் பயன்படுத்துவோர் அங்கே பெருகி வருகின்றனர். இந்தியாவில் நிலைமை எப்படி உள்ளது? நாமும் அதை நோக்கித்தான் செல்கிறோமா...

Read More
அறிவியல்-தொழில்நுட்பம்

ஆர்ட்டிஃபிஷியல் அச்சங்கள்

சமீபத்தில் ஒரு காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகியது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே உள்ள பூங்காவில் இளம்பெண் ஒருவர் கண்ணீருடன் அமர்ந்திருக்கிறார். பூங்கா காவலர் அவருக்கு ஆறுதல் சொல்கிறார். தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரியும் அந்தப் பெண்ணின் கவலைக்குக் காரணம், செயற்கை நுண்ணறிவு (AI). ஏஐ...

Read More
கணினி

சர்வர்ம் சுந்தரம்!

பிப்ரவரி மாதம் முதல் நாள். சர்வம் தனது ஏஐ அறிவிப்புகளை வெளியிடத் தொடங்கியது. சர்வம் ஒரு ஸ்டார்ட்-அப் நிறுவனம். பெங்களூருவைச் சேர்ந்தது. ஏஐயை உற்றுநோக்குபவர்களைத் தவிரப் பிறர் சர்வத்தை அறிந்திருக்க வாய்ப்பில்லை. பிப்ரவரி வளர வளர சர்வத்தின் பெயர் பிரபலமடையத் தொடங்கியது. ஏஐ உச்சி மாநாட்டையொட்டித்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!