அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் தொட்டதற்கெல்லாம் சாட்ஜிபிடியை நாடுவது அதிகரித்துள்ளது. துணைக்காகவும் ஆலோசனைக்காகவும், இன்னும் ஒருபடி மேலே போய் நெருக்கத்தை வேண்டியும் சாட்ஜிபிடியைப் பயன்படுத்துவோர் அங்கே பெருகி வருகின்றனர். இந்தியாவில் நிலைமை எப்படி உள்ளது? நாமும் அதை நோக்கித்தான் செல்கிறோமா?
சாட்பாட்கள் எனப்படும் செயற்கை நுண்ணறிவு அரட்டை இயலிகள் இல்வாழ்க்கையில் கணிசமான தாக்கத்தைச் செலுத்தி வருகின்றன. அவை சந்தைக்குள் நுழைந்தபோது, ஓர் உயிரற்ற இயந்திரத்தால் மனித உறவுடன் போட்டியிட முடியும் என்று ஒருவரும் நினைக்கவில்லை. ஆனால், இன்றைக்கு அது சாத்தியமாகியுள்ளது.
ஏஐ சாட்பாட்டுடன் காதலில் விழுந்த எழுபத்தைந்து வயது முதியவர் தன்னுடைய மனைவியிடம் விவாகரத்து கோரினார்.
ஏஐ சாட்பாட் காதலிக்குத் திருமணம் செய்ய முன்மொழிந்தார் ஒருவர். இது அவரது நிஜ மனைவியை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.















Add Comment