பணிவு முக்கியம்
பொறியியல் மற்றும் மேலாண்மை அறிவியல் (Management Science) ஆகிய இரு துறைகளில் முதுநிலைப் பட்டம் பெற்ற ஓரிளைஞர் தனது மூவாயிரத்தைந்நூறு டாலர்கள் பெருமதியான சொகுசுக் காரில் செல்கிறார். ஒரு அடுக்கு மாடிக் குடியிருப்பில் உள்ள ஒரு வீடு விற்பனைக்குப் போடப்பட்டிருப்பதைக் காண்கிறார். ஐந்து வீதம் முற்பணத்துடன் மிகுதி வங்கியில் கடன் எடுத்து அந்த வீட்டை வாங்கலாம். முற்பணம் மற்றும் இதர செலவுகளுக்குத் தேவையானது ஒரு சில ஆயிரம் டாலர்களே. சற்றுச் சிந்தித்த அந்த இளைஞர் தனது காரை விற்று மிகவும் மலிவாக அறுநூறு டாலர்களுக்குத் தனது தேவையைப் பூர்த்தி செய்யக் கூடிய ஒரு காரை வாங்கினார். கார் விற்ற பணத்துடன் சிறிதளவு கடனும் பெற்று அந்த வீட்டை வாங்கத் தேவையான தொகையைத் திரட்டி ஐம்பத்தையாயிரம் டாலர்களுக்கு வாங்கினார். இது நடந்தது ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எண்பத்தாறாம் ஆண்டில்.
good one sir