Home » மொழியைக் கொண்டு வழியை அறிவோம்
ஆளுமை

மொழியைக் கொண்டு வழியை அறிவோம்

பிஷப் கால்டுவெல்

இந்த ஆண்டு கால்டுவெல்லின் 211வது பிறந்த நாள் தமிழ்நாடு அரசு சார்பில் கொண்டாடப்படுகிறது. பெரும்பாலானவர்களுக்கு இவரது பெயர் தெரியும். பின்னணி தெரியுமா? தெரிந்துகொள்வோம்.

பொன்னிற அலைகளாக கடல் கொந்தளித்துக் கொண்டிருந்தது. காலையில் கண்விழிக்கும் போதே இடையன்குடியின் சுட்டெரிக்கும் வெங்காற்றும் செம்மணல் தேரியின் சூடும், உடலை வியர்வையில் நனைத்துவிடும். அப்படியொரு கோடை காலத்தில்தான், 1841ஆம் ஆண்டு மெட்ராசிலிருந்து இடையன்குடிக்கு பிஷப் கால்டுவெல் நடந்தே வந்தார். லண்டன் திருச்சபையின் சார்பாக மதப்பணியாறுவதற்கு தென் தமிழகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அப்போது தென் தமிழகத்தின் கடற்கரைப் பகுதிகளில் கிறிஸ்தவ மதத்தின் புதிய நெறியான கிறிஸ்தவச் சீர்திருத்தச் சபை (புரட்டஸ்டாண்ட் சபை) வேரூன்றத் தொடங்கியிருந்தது. பாளையங்கோட்டைக்கும் திருச்செந்தூருக்கும் இடையிலான நெடு நிலத்தில் நாடார் இனத்தவர் பெருமளவில் வாழ்ந்து வந்தனர். நாடார்கள் வாழ்ந்த இடங்களில் ஒன்றே இடையன்குடி. பத்தொன்பதாவது நூற்றாண்டில் கிறிஸ்தவம் வேரூன்ற ஆரம்பித்திருந்தது. கொள்ளை நோய் விரைந்து பரவியது. கிறிஸ்தவ நாடார்கள் வசித்த ஊர்களில் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். மதம் மாறியதால் தங்களுக்கு இந்தத் தண்டனை கிடைத்தது என்று அவர்கள் எண்ணினார்கள். அதற்கு பிராயச்சித்தமாகத் தங்கள் தாய் மதத்துக்குத் திரும்பினார்கள். பஞ்சமும் பிணியும் நீங்கிய பின்னரும் கிறிஸ்தவ மதத்தை நினைக்கவே அஞ்சினார்கள். இத்தகைய இக்கட்டான சூழலில் தான் பிஷப் காலிடுவேல் மதப் பணியாற்றுவதற்காக இடையன்குடி வந்து சேர்ந்தார்.

இடையன்குடியில் ஒரு சிறிய கிறிஸ்தவ ஆலயமும், வேதப் பணியாளர்கள் தங்குவதற்கு சிறு வீடும் அமைந்திருந்தது. கால்டுவெல் அந்த வீட்டுக்குக் குடியேறினார். ஆலயத்தையும் சுற்றியிருந்த குடியிருப்புகளையும் சீரமைக்கத் தொடங்கினார். கல்வி அறிவு பெற்றிராத அப்பகுதி மக்களுக்கு எழுதவும் படிக்கவும் கற்பிக்கப் பாடசாலைகளை நிறுவினார். பழந்தமிழ் நூல்களான திருக்குறள், சிந்தாமணி, நன்னூல் ஆகியவற்றை முறையாகக் கற்றறிந்தார். இறைப்பணியின் போதே தமிழில் அமைந்த பிரார்த்தனை நூல்களைத் திருத்தியமைத்தார். பைபிள் மொழியாக்கக் குழுவில் தீவிரமாகச் செயல்பட்டார். தென்னிந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளு ஆகிய மொழிகளை ஆராயும் முயற்சியில் இறங்கினார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!