சமீபத்தில் நடந்த நேபாள நாட்டுப் புரட்சியைத் தொடர்ந்து இடைக்காலப் பிரதமர் தேர்வு செய்யப்பட்டது ஒரு செயலியில் என்றால் நம்ப முடிகிறதா? டிஸ்கார்ட் (Discord) செயலியைக் கொண்டு அந்நாட்டு ஜென் ஸீ இளைஞர்கள் யார் தங்களின் புதிய பிரதமராக வேண்டும் என்பதைக் கலந்தாலோசனைகள், கருத்துக் கணிப்புகள் செய்தார்கள். அது என்ன டிஸ்கார்ட்?
2021ஆம் ஆண்டு மைக்ரோசாப்ட்டின் சத்யா நாதெள்ளா, பத்து பில்லியன் அமெரிக்க டாலருக்கு டிஸ்கார்ட்டை வாங்க முயன்றார். ஆனால் டிஸ்கார்ட் நிறுவனர்கள் அதனை விற்க மறுத்துவிட்டார்கள். அப்படி இந்தச் செயலியின் சிறப்புதான் என்ன?
நீங்கள் வீடியோ கேம் விளையாடுபவர் என்றால் உங்களுக்கு டிஸ்கார்ட்டைப் பற்றித் தெரிந்திருக்க வாய்ப்புகள் அதிகம். இணையத்தில் பல சமூக வலைத்தளங்கள் இருக்கின்றன, ஆனால் வீடியோ கேம் விளையாடுபவர்கள் தங்களுக்குள் கருத்துக்களைப் பகிர, பேச, குழுக்களை நிர்வகிக்க உருவாக்கப்பட்ட தளம்தான் டிஸ்கார்ட். 2025ஆம் ஆண்டு நிலவரப்படி, இருபது கோடிக்கும் அதிகமானோர் மாதம்தோறும் பலமுறை டிஸ்கார்ட்டைப் பயன்படுத்துகிறார்கள்.
2025 மே மாதம், ஜேசன் சிட்ரன் (Jason Citron), ஸ்டானிஸ்லாவ் விஷ்னெவ்ஸ்கி (Stanislav Vishnevskiy) என்ற இருவரால் தொடங்கப்பட்டது டிஸ்கார்ட்.















Add Comment