ஆங்கிலேய அரசின் பிரித்தாளும் கொள்கைக்குச் சிறந்த எடுத்துக்காட்டு வங்காளப் பிரிவினை. 16.10.1905 அன்று வங்காளம் அதிகாரப்பூர்வமாகப் பிரிக்கப்பட்டது. அந்த நாள் துக்க நாளாக அறிவிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானவர்கள் வந்தே மாதரம் பாடலைப் பாடியபடி கல்கத்தாவின் சாலைகளில் அணிவகுத்துச் சென்றார்கள்.
ஒருங்கிணைந்த வங்காளம் என்பது மேற்கு வங்காளம், கிழக்கு வங்காளம், பீகார், ஒடிஷா எனப் பரந்து விரிந்திருந்தது. எட்டு கோடிக்கும் அதிகமான மக்கள்தொகை இருந்த மாகாணம். நிர்வாகக் காரணங்களுக்காக இதைப் பிரிக்கிறோம் என்று அறிவித்தார் அப்போதைய வைஸ்ராய் கர்சன் பிரபு. ஆனால் அது இந்துக்கள், இஸ்லாமியர்கள் என்று மத அடிப்படையில்தான் பிரிக்கப்பட்டது. கிழக்கு வங்காளம் இஸ்லாமியர்கள் மட்டுமே வாழும் பகுதியானது.















I learned something new, last para got me curious to find a book and read about this. Interesting