64 தாகம்
ராஜஸ்தான் வரவிருக்கிறது என்பதை உஜ்ஜய்னில் அடித்துக்கொண்டிருந்த வெயிலே சொல்லாமல் சொல்லிக்கொண்டிருந்தது. தகிப்பையும் மீறி கனவில்கூடக் கண்டிராத பாலைவனத்தைப் பாபா ஆம்தே புண்ணியத்தில் இன்னும் சில நாட்களில் பார்க்கப்போகிறோம் என்கிற நினைப்பில் பயங்கரக் குஷியாகிவிட்டது. பாலைவனம் ஒரே மணலாக இருக்குமே அதில் எப்படி சைக்கிள் ஓட்டமுடியும் என்கிற கவலையும் எழுந்தது.
பாறைகளாக வந்துகொண்டிருந்த ஆந்திராவின் ராயலசீமா பகுதியின் வறண்ட பூமியில் சிற்றுண்டியாகக் கொடுக்கப்பட்ட அவலைத் தின்றுகொண்டிருந்தபோது தொண்டை பிடிக்கிறதே என்று பிளாஸ்டிக் பாட்டிலை வைத்திருந்த சுதீரிடம் நீர் கேட்டதும் ‘ஒரு மிடறு மட்டும்’ என்று அவன் சொன்னதும் நினைவுக்கு வந்தன.
‘என்னடா இவன்’ என்று இவன் நினைக்கிறான் என்பதை முகத்தை வைத்தே ஊகித்த அவன் சொன்னான்.















Add Comment