Home » தேறிச் சிறந்த தலைமுறை: லட்சத்தில் சில ‘முதல்வன்’கள்
கல்வி

தேறிச் சிறந்த தலைமுறை: லட்சத்தில் சில ‘முதல்வன்’கள்

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய 2025 குடிமைப் பணித் தேர்வுக்கான (UPSC) முடிவுகள் மார்ச் 6ஆம் தேதி வெளியாயின. இந்தத் தரவரிசைப் பட்டியலில் இரண்டாம் மற்றும் ஏழாம் இடங்கள், அறுபதுக்கும் மேற்பட்டோர் தேர்ச்சி எனத் தமிழகத்தைச் சேர்ந்த இளம் வெற்றியாளர்களின் சாதனைகளுக்கு அடித்தளமாக இருப்பது தமிழ்நாட்டு அரசின் ஒருங்கிணைந்த திறன் மேம்பாட்டுத் திட்டமான ‘நான் முதல்வன்’.

முதலில் அகில இந்தியப் பணி என்றழைக்கப்படும் சிவில் சர்வீஸ் தேர்வுகளைப் பற்றித் தெரிந்து கொள்வோம். இந்திய ஆட்சியர் பணி (IAS), இந்திய வெளியுறவுச் சேவை (IFS), இந்தியக் காவல்துறைச் சேவை (IPS), இந்திய வருவாய்ச் சேவை (IRS) உள்ளிட்ட பல்வேறு உயர்நிலை அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளை மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.

நாட்டுக்குச் சேவை செய்யும் வாய்ப்பு, நிர்வாக அதிகாரம், உயர்ந்த சமூக அந்தஸ்து ஆகிய அனைத்தையும் உள்ளடக்கிய இப்பணிகளில் சேர்வதற்காக இந்தியா முழுவதும் லட்சக்கணக்கான மாணவர்கள் இந்தப் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகின்றனர்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!