Home » பனிப் புயல் – 21
தொடர்கள் பனிப் புயல்

பனிப் புயல் – 21

21 – உண்மையைத் துளைக்கின்ற கேள்விகள்

ஃபிரெஞ்சு ஃபிரைஸ் என்பதில் ஃபிரெஞ்சு என்ற பெயர் உள்ளதால், ஃபிரீடம் ஃபிரைஸ் என்று அழைக்கப்பட்ட காலம் அது (2003). ஈராக்கில் ஆட்சி மாற்றம் கொண்டுவர அமெரிக்கா எடுத்த ராணுவ நடவடிக்கையை ஃபிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்ய நாடுகள் எதிர்த்தன. ஈராக்குக்கு ஆதரவாகக் குரல் கொடுத்ததால் இவற்றின் மீது கண்டனம் தெரிவித்தன அமெரிக்காவும், பிரிட்டனும். ஈராக் மீது போரை விரும்பவில்லை என்று புதினுக்கு உறுதியளித்திருந்த புஷ் ஏமாற்றிவிட்டார்.

மாஸ்கோவில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், பிரிட்டன் அதிபர் டோனி பிளேரிடம் நேரடியாகவே தனது கேள்வியை முன்வைத்தார் புதின். ‘ஈராக்கில் இருப்பதாகச் சொல்லப்படும் பேரழிவு ஆயுதங்கள் ஏன் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை? அந்நாட்டின் அதிபர் சதாமை என்ன செய்தீர்கள்? அவர் பதுங்கு குழியிலிருந்து ஆயுதங்களை வெடிக்க வைக்க காத்துக் கொண்டிருக்கிறாரா?’ என்றார். கேள்விகள் சங்கடப்படும்படி இருந்தாலும், உண்மையான பதில் இருவருக்கும் தெரிந்திருந்தது. ‘சதாமிடம் பேரழிவு ஆயுதங்கள் இருப்பது உண்மையே. அவை விரைவில் கண்டுபிடிக்கப்படும்’ என்று டோனி பிளேரால் மழுப்ப மட்டுமே முடிந்தது.

இரானுக்கான ரஷ்ய ஆதரவு எப்போதும் போலத் தொடர்ந்தது. மக்கள் பயன்பாட்டுக்காக அணுசக்தியை உபயோகிக்கும் திட்டங்களில் ரஷ்யா இரானுக்குத் துணையாக நின்றது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!