விதி தன் கரங்களை மதராஸ் பட்டினத்தின் கடற்கரைக் காற்று வழியாகச் செலுத்தியது. சற்றுநேரத்திலேயே அவர் ஒதுக்கியிருந்த கடிதம் பறந்து வந்து மீண்டும் அவரின் மேஜையின் மீது விழுந்தது.
Tag - நீலமலை ரகசியம் தொடர்
அந்தக் கோடைக்காலத்தில் தன் முன் வந்து குவிந்திருந்த ஏராளமான கடிதங்களில் மஞ்சள் நிற உறையில் பெரிய பச்சை எழுத்துகளில் எழுதப்பட்ட அந்தக் கடிதம் அவரது கண்களைக் கவர்ந்தது.
இதற்கு மேல் செங்குத்தான பாதைகள். ஒற்றைக்கால் வைத்து ஜாக்கிரதையாக நடக்கவேண்டிய குறுகிய தடங்கள். அதைக் கடக்க மூன்று நாள்கள் வேண்டியதிலிருந்தே வழியில் அபாயங்களைத் தெரிந்துகொள்ளலாம்.
முழுவதும் வனம். உயர்ந்த மலைகள். வனவிலங்குகளின் அச்சுறுத்தல். எல்லாவற்றையும் தாண்டி இந்த அடர்வனத்தில் இச்சிறிய கிராமம் ஒளிந்து கொண்டிருக்கிறது.
நள்ளிரவு கடந்தபோது ஒரு பெண் அவரை வந்து எழுப்பினாள். ஏதோ அவசரம் என்று சைகை செய்தது மட்டும் அவருக்கு நினைவிருக்கிறது. என்ன சொன்னாள் என்று புரியவில்லை.
பருத்தி விளைவித்து, மில்களை உருவாக்கி இன்னொரு மான்செஸ்டராக கோயம்புத்தூரை உருவாக்கும் ஆதாரப்பூர்வமான திட்டத்திற்கே அரசாங்கம் முட்டுக்கட்டை போட்டிருக்கிறது.
1. அடிவாரம் மலைகள், தூரத்து ரகசியங்களென மோன நிலையில் தனித்திருந்தன. பகல்நேர வெயிலில் அவை நீலநிறம் கொண்டு கவிழ்த்து வைக்கப்பட்ட மலர் மொக்குகளெனக் காட்சி அளித்தன. மாலை மயங்கி இரவு சேரும் முன்னால் அடர் வனங்கள் கரும்பச்சை வண்ணம் கொண்டு பயமுறுத்தின. மாலையில் அங்கிருந்து இறங்கும் காற்றில் ஈரம்...













