முகத்தில் எழுதி ஒட்டியிருக்குமா?
‘அதான் மூஞ்சிலயே எழுதி ஒட்டியிருக்கே’ என்ற வார்த்தைகளை நாம் பலமுறை கேட்டிருப்போம். நிஜமாகவே மனத்தில் நினைப்பது முகத்தில் தெரியுமா என்றால், ‘நிச்சயமாக’ என்கிறது உளவியல். நாமும் இதைப் பல தருணங்களில் உணர்ந்திருப்போம். அதன் காரணமாகவே ‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ என்ற பழமொழி பிறந்திருக்கிறது. ‘உன் மொகரக்கட்டயப் பாத்தாலே தெரியுது’ என்று கவித்துவமாகவும் சொல்வார்கள் சிலர்.
முகத்தின் முக்கியமான உறுப்பு கண்கள். பொய்யைக் கண்டுபிடிப்பதில் அவை எப்படி உதவுகின்றன என்பதைப் பார்த்தோம். கண்களின் நகர்வுகளைக்கொண்டு பொய்யறியும் பயிற்சி ஒன்றையும் கற்றுக்கொண்டோம். இதில் நினைவில் கொள்ளவேண்டிய மற்றொன்றும் உண்டு.
உண்மைச் சம்பவத்தைக் குறித்து யோசிக்கும்போது சிலர் வலது புறமல்லாமல் நேராகவும் பார்ப்பார்கள். பார்வை சற்று தாழ்ந்திருக்கும். கட்டுப்பாட்டுக் கேள்விகளின்போதே இந்த நடத்தையைக் குறித்துக்கொள்ளவேண்டும்.
















Add Comment