காலையில் மெதுவடை, நண்பகல் மசால் வடை, மாலை கீரை வடை என்று சாப்பிட்டு வளர்ந்த ஆள் நான். ஒருகட்டத்தில் வடைக்கே என்னைப் பிடிக்காமல் போய்விட்டது. அதனால் அந்தப் பக்கமே செல்லாமல் இருந்தேன். உலகுக்குப் பொறுக்குமா? ஆசிரியர் ஓர் அதிகாலையில் அழைத்தார். மதுரையில் உள்ள முக்கிய வடைத்தலங்களுக்குச் ஒரு யாத்திரை செல்லப் பணித்தார். அப்படித்தான் ‘மதுரையில் ஒரு வடை யாத்திரை’ எழுதினேன்.
அப்படிப்பட்ட எனக்குச் சமீபத்தில் ஒரு வெளிநாட்டுப் பயணம் வாய்த்தது. ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னியில் உள்ள மகளைப் பார்க்கச் சென்றோம். அவள் வீட்டில்தான் தங்கப் போகிறோம், அதனால் வீட்டுச் சாப்பாட்டுக்குக் குறையில்லை. ஆனால் மதுரைக்காரனாக எனக்கென்று சில ஆசைகள் இருக்குமே! விசாலம் காப்பி, கோபு ஐயங்கார் கடை வெள்ளை அப்பம் காரச் சட்னி, அம்மன் நெய் பணியாரம். இவற்றுக்கு எங்கே போவது?
காப்பிக்கான என்னுடைய தேடல் சென்னை விமான நிலையத்திலேயே தொடங்கிவிட்டது. அங்குள்ள அடையார் ஆனந்த பவனில் மணக்க மணக்க ஒரு ஃபில்டர் காப்பி. அதில் என்னதான் கலக்குகிறார்கள் யாமறியேன். அப்படியோர் சுவை.
















Add Comment