54 ஹை அண்ட் லோ ‘நாளை தாராவி செல்கிறோம்’ என்று நாயர் சொன்னதற்கு ஒன்றுமே சொல்லாமல் சுதீர் அமைதி காத்ததைப் போல நாமும் வராமல் கழன்றுகொண்டிருந்திருக்கலாமோ எனத் தோன்றிற்று. இந்த சைக்கிள் பயணம் ஊர் சுற்றிப் பார்க்கும் டூர் இல்லை. மனிதர்களைத் தெரிந்துகொள்வதற்கானது. தேசத்தைப்...
Tag - தொடரும்
ஆமாம் என்றா சொன்னாய்? ஏப்ரல் – 1983. வலோத்யாவும் லூத்மிலாவும் காதலிக்கத் தொடங்கி மூன்றரை வருடங்கள் ஆகியிருந்தன. ஓர் இரவு அவரது இல்லத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். அதுவே கடைசி சந்திப்பாகவும் இருக்கலாம். காதல் முடிவுக்கு வந்து அடுத்த நாளே அங்கிருந்து கிளம்ப வேண்டியிருக்கும் என்றது...
பாடம் ஆப்பிள் செய்த அனைத்துமே வெற்றியா என்றால் இல்லை. அவர்கள் முனைந்து செய்து, எதிர்பார்த்த வெற்றி கிடைக்காத திட்டங்களும் உண்டு. அவற்றுள் ஒன்றுதான் க்யூப். இது செல்லப் பெயர். ஆப்பிள் அதற்கு வைத்த முழுப்பெயர் ‘பவர் மேக் ஜி4 க்யூப்’. இப்படியொரு நாமகரணம் செய்ய ஜாப்ஸ் எப்படிச் சம்மதித்தார்...
53 பாம்பே அம்பை வீட்டை அடைந்தது மதியத்துக்குக் கொஞ்சம் முன்னர் என்பதால் அவர் சமைத்துக்கொண்டிருந்தார். சமைக்கிற அம்பையைப் பார்க்கக் கொஞ்சம் தமாஷாக இருந்தது. ‘அம்பை சமைப்பதை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை’ என்றான். ‘ஏன் அம்பைக்குப் பசிக்காதா. அவ சாப்ட வேண்டாமா’ என்று...
இசை ‘டாப் 100’ என்றொரு திட்டம். ஜாப்ஸ் ஆண்டுதோறும் இதை விமரிசையாக நடத்திவந்தார். ஆப்பிள் பணியாளர்களில் ஆகச் சிறந்த நூறு பேரைத் தேர்ந்தெடுப்பார். அவர்களை மட்டும் அழைத்துக்கொண்டு எங்கேனும் சென்றுவிடுவார். அவர்களிடம் ஒரே ஒரு கேள்வியை மட்டும் கேட்பார். ‘அடுத்தாண்டு நாம் செய்ய வேண்டிய...
இன்று நீலமலைகள் பதினெட்டாம் நூற்றாண்டு வரையில் முற்றிலும் மனிதன் அணுகமுடியாத பிரதேசமாக இருந்தன. பழங்குடியினரும் மலைவாசியினரும் குகைகளிலும் வனங்களிலும் மறைந்து வாழ்ந்திருந்தனர். தொல்குடியினரின் குகைச் சித்திரங்களின் வழி மனிதவாழ்வு சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அங்கிருந்ததைச் சொல்கிறது. அரச...
195. ரேபரேலி விஜயம் மேனகா காந்தியின் அப்பா கர்னல் ஆனந்த்தின் திடீர் மரணம் இந்திரா காந்தி குடும்பத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மரணம் நிகழ்ந்த சூழ்நிலை, வேண்டாத பின்விளைவுகளை ஏற்படுத்தக் கூடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியது. ஆனால் கர்னல் ஆனந்த் திடமான மனநிலை கொண்டிருக்கவில்லை. இதற்கு முன்பு கூட...
விமானத்தில் வந்திறங்கிய காதல் மார்ச் – 1980. எஸ்த்ராதா அரங்கம், செயின்ட் பீட்டர்ஸ்பர்க், ரஷ்யா. சார்லி சாப்ளினைப் போல ரஷ்யாவின் பிரபலமான மேடைச் சிரிப்புரையாளர் அர்காதி ரைகின். இவரது நிகழ்ச்சிக்கான நான்கு டிக்கெட்டுகளுடன் அரங்கத்தின் நுழைவாயிலில் காத்துக்கொண்டிருந்தார் வலோத்யா. நண்பர்...
கடை விரித்தேன் ஆபரேட்டிங் சிஸ்டத்தின் புதிய வெர்ஷன் தயாராகிக்கொண்டிருந்தது. யூஸர் இண்டர்ஃபேஸ் டீமை ஜாப்ஸ் மாற்றியமைக்கத் திட்டமிட்டார். அதற்கென அவரே இன்டர்வியூக்களை நடத்தினார். அதிலொரு சுவாரசியமான இன்டர்வியூ குறித்துப் பார்ப்போம். ஜாப்ஸ் நடத்தும் இன்டர்வியூக்கள் தனித்துவமானவை. வழக்கமான மனிதவள...
உல்லாசபுரி நீலமலைகள் கண்டறியப்பட்டு ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக அது வெள்ளையர்களுக்கும், அப்போதைய ராஜாக்களுக்கும், பெருவசதி கொண்ட செல்வந்தர்களுக்குமான மலையாகவே இருந்தது. நடுத்தர மக்களும் ஏழைகளும் அதுவரை சுற்றுலா என்ற வசதிக் கோட்பாட்டுக்குள் நுழையாத காலம் அது. அவர்களுக்கு ஆற்றங்கரைகளும், கோவில்...













