Home » தொடரும் » Page 6

Tag - தொடரும்

குடும்பக் கதை தொடர்கள்

ஒரு குடும்பக் கதை – 200

200. மொரார்ஜி-சரண் சிங் மோதல் கர்நாடகத்தில் ஓய்வுப் பயணமாகக் கோவில்கள் மற்றும் மடங்களைப் பார்வையிட்டுக் கொண்டிருந்த இந்திரா காந்திக்கு சஞ்சய் காந்தியின் கைது பற்றிய தகவல் அறிந்தவுடன் பெற்ற மனம் பதைபதைத்தது. உடனே டெல்லிக்கு விரைந்தார். விமான நிலையத்திலிருந்து நேராக திகார் சிறைக்குச் சென்று சஞ்சய்...

Read More
அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் தொடர்கள்

அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் – 42

கட்டுப்பாடு ஆப்பிளுக்கு ஒரு புதிய போட்டி உருவானது. அவர்கள் சற்றும் எதிர்பார்த்திராத போட்டியாளர். கூகுள். ஆப்பிள் தங்களுடைய ஐஃபோனுக்காக ஒரு ஆபரேட்டிங் சிஸ்டத்தை உருவாக்கியிருந்தது. ஐஓஸ். இதற்குப் போட்டியாக வந்தது ஆண்ட்ராய்ட். இன்று வரையிலும் தொடர்கிறது இப்போட்டி. தொடக்கத்தில் இது மிகவும் தீவிரமாக...

Read More
தமிழ்நாடு

பொரியல், கூட்டு, ரசம் – 5

மதிமுக முதல் மறுபடியும் திமுக வரை திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்திருப்பது யாருக்குக் கவலையை ஏற்படுத்தியிருக்கிறதோ இல்லையோ, நிச்சயம் மதிமுகவுக்குக் கவலையை ஏற்படுத்தியிருக்கிறது. கூட்டணியில் கடைசியாக இணைந்து ஒரு மாநிலங்களவை சீட்டையும் பெற்றுவிட்டது தேமுதிக. மதிமுக தரப்புக்கு மாநிலங்களவை சீட் இல்லை...

Read More
இலக்கியம் சக்கரம் நாவல்

சக்கரம் – 57

57 சிரிப்பும் அழுகையும்   சைக்கிள் ரேலியில் வந்துகொண்டிருந்த லாரிகளும் பாபாவின் ஆம்புலன்ஸாக இருக்கிற வேனும் போகக் கிட்டத்தட்ட அதே போன்ற இன்னொன்றும் வர ஆரம்பித்திருப்பதைத் தற்செயலாகத்தான் பார்த்தான். அவ்வளவு பெரிய வண்டி புதிதாக வருவதைக்கூடக் கவனிக்காமல் இருந்தவனுடைய கவனத்தைக் கவர்ந்தது...

Read More
தமிழ்நாடு

பொரியல், கூட்டு, ரசம் – 4

2026 சட்டமன்றத் தேர்தலையொட்டி கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன. யாரோடு யார் கூட்டு என்பது கிட்டத்தட்ட முடிவாகி விட்டது. திமுக, அதிமுக என இரண்டு தரப்பிலும் கூட்டணி குறித்துப் பேசிக்கொண்டிருந்த தேமுதிக, இறுதியாக திமுக கூட்டணியில் இணைந்திருக்கிறது. அவர்களுடைய நீண்ட நாள்...

Read More
குடும்பக் கதை தொடர்கள்

ஒரு குடும்பக் கதை – 199

199. உயிர் காத்த நெடுமாறன் மதுரை விமான நிலையம் வந்திறங்கிய இந்திரா காந்தி, மக்கள் அளித்த உற்சாகமான வரவேற்பு காரணமாக மிகுந்த மகிழ்ச்சியோடு காரில் தெற்கு வெளி தெருவுக்குள் நுழைந்தபோது, கறுப்புக் கொடி எதிர்ப்பு என்ற பெயரில் கூடி இருந்த தி.மு.க.வினர் இந்திரா காந்தியைத் தாக்குவதற்குப் பாய்ந்தார்கள்...

Read More
அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் தொடர்கள்

அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் – 41

ஐபேட் ஐஃபோன் அமோகமாக விற்றுக்கொண்டிருந்தது. ஆப்பிள் தயாரிப்புகளிலேயே நம்பர் ஒன் இதுதான் என்று பேசத்தொடங்கியிருந்தனர். பயனாளர்களின் தேவைகளை உணர்வதில் ஜாப்ஸுக்கு நிகரில்லை. ஐஃபோனின் பிரம்மாண்டமான வெற்றிக்கும் இதுவே அடிப்படையான காரணம். ஆனால் இவையெல்லாம் நோய்க்குத் தெரியாதல்லவா? இரண்டாயிரத்து எட்டாம்...

Read More
தொடர்கள் பனிப் புயல்

பனிப் புயல் – 41

கண்ணாடி வீட்டு வாழ்க்கை ரப்பர் போலத் தன் உடலை வளைக்கும் திறனுடையவர் அலினா கபாயேவா. நான்கு வயதிலிருந்து ஜிம்னாஸ்டிக்ஸ் கற்றுக்கொண்டார். 2004ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றார். உலகளவில் பதினான்கு சாம்பியன்ஷிப் பதக்கங்கள், ஐரோப்பியப் போட்டிகளில் இருபத்தியொரு பதக்கங்கள் என அள்ளிக்...

Read More
தமிழ்நாடு

பொரியல், கூட்டு, ரசம் – 3

அதிமுக தோன்றியது முதல் தற்போது வரை ஒரே ஒரு கொள்கையை விடாமல் கடைப்பிடிக்கிறதென்றால் அது திமுக எதிர்ப்பு என்று சந்தேகமின்றிச் சொல்லலாம். எம்ஜிஆரைத் தொடர்ந்து ஜெயலலிதா அந்தக் கொள்கையில் மாறாமல் இருந்தார். இன்றைக்கு அதிமுகவுக்குத் தலைமையேற்றிருக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கும் அந்தக் கொள்கையில் எந்த...

Read More
அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் தொடர்கள்

அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் – 40

ஜீசஸ் ஃபோன் கேன்சருக்கும் ஜாப்ஸுக்குமான போராட்டம் தொடர்ந்தது. கொஞ்சம் கொஞ்சமாகத் தேறினார். ஒருகட்டத்தில், தான் குணமாகிவிட்டதாக வெளியுலகுக்கு அறிவித்தார். ஆயினும் கேன்சர் அவரை விட்டு விலகவில்லை. இரண்டாயிரத்து ஐந்தாம் ஆண்டு. ஜாப்ஸுக்கு வயது ஜம்பது. அவருடைய முப்பதாவது பிறந்தநாளை எத்தனை சிறப்பாகக்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!