வாசக நண்பர்களுக்கு வணக்கம். மெட்ராஸ் பேப்பர் தொடங்கி நான்கு ஆண்டுகள் நிறைகின்றன. எதிர்வரும் ஜூன் முதல் தேதி ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம். ஓர் இணைய வார இதழ் இன்றைய சூழலில் நான்காண்டுகளை இடையூறின்றிக் கடப்பது சாதாரண விஷயமல்ல. இதனைச் சாத்தியமாக்கிய உங்களுக்கு முதலில் மனமார்ந்த நன்றியைத்...
Author - மெட்ராஸ் பேப்பர்
![]()
மத்தியக் கிழக்கில் அமெரிக்கா-இரான் போர் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதனால் உலக நாடுகளின் பொருளாதார அடித்தளங்கள் ஆட்டம் காணத் தொடங்கியிருக்கின்றன. அந்த வரிசையில் இந்தியாவும் சேர்ந்துவிடும் என்ற அச்சத்தையும் கவலையையும் பிரதமர் நரேந்திர மோடியின் சமீபத்திய பேச்சு உருவாக்கியிருக்கிறது...
நடந்த முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வென்றது. இருந்தாலும், சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கத் தேவையான 118 இடங்களுக்குப் பத்து தொகுதிகள் குறைவாகப் பெற்றது. அதற்கடுத்த இடங்களில் திமுக கூட்டணி 73 இடங்களிலும், அதிமுக கூட்டணி 53 தொகுதிகளிலும்...
நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், தான் போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே பெருவெற்றி பெற்று ஆட்சி அமைக்கப் போகிறது. இது தமிழ்நாட்டில் மட்டுமல்லாது, இந்தியா முழுவதிலும் ஆச்சரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த அறுபது ஆண்டுகளாகத் தமிழ்நாட்டை மாறி மாறி ஆண்டுவந்த...
ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த ஏழு மாநிலங்களவை உறுப்பினர்கள் கட்சித் தாவி பாஜகவில் இணைந்துள்ளது தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மொத்தம் பத்து மாநிலங்களவை உறுப்பினர்களைக் கொண்டிருந்த ஆம் ஆத்மி கட்சிக்கு இப்போது மூன்று உறுப்பினர்களே எஞ்சியுள்ளனர். பத்தில் ஏழு பேர் பிரிந்ததனால், அவர்களுடைய...
வாக்களிக்கத் தகுதி படைத்த முதல்முறை வாக்காளர்கள் உள்ளிட்ட அனைத்து வாக்காளர்களுக்கும் வாழ்த்துகள். தேர்தல் திருவிழாவின் இறுதி நாளுக்கு வந்துவிட்டோம். பல வாரங்களாகச் சுற்றிச் சுழன்று வாக்கு கேட்ட வேட்பாளர்களின் வேலை முடிவுக்கு வந்துவிட்டது. இடைவிடாத பிரசாரங்களும் தேர்தல் விளம்பரங்களும் ஆட்கொண்டிருந்த...
இரானும் அமெரிக்காவும் இரண்டு வார இடைக்காலப் போர் நிறுத்தத்தை ஏப்ரல் 8 ஆம் தேதி அறிவித்தன. இரு தரப்புக்கும் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தையை பாகிஸ்தான் முன்னெடுத்துள்ளது. பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், அமெரிக்காவும் அவற்றின் நட்பு நாடுகளும் இரானும் முழுமையான போர் நிறுத்தத்துக்கு...
சாத்தான்குளம் தந்தை-மகன் காவல்நிலைய இரட்டைக் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஒன்பது காவல்துறையினருக்கு நீதிமன்றம் தூக்குத் தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளது. கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகாலம் நடைபெற்ற இந்த வழக்கில் இப்போது தீர்ப்பு வெளியாகியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் மொபைல் ஃபோன் கடை...
61 நிழல்கள் நூறு வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட நர்மதா பாலத்தைக் கடந்து வந்தது பிரமாதமாக இருந்தது. 1877ல் தொடங்கி 1881ல் கட்டி முடிக்கப்பட்டது என்று முகப்பிலேயே இருந்தது. நூறு வருடங்களாய் தண்ணீரில் நின்றுகொண்டிருக்கிறது என்பதே பிரமிப்பை உண்டாக்கிற்று. பிரென்ச்சுக்காரன் முட்டையைக் குழைத்துப்...
தமிழகத்தில் தேர்தல் திருவிழா சூடுபிடித்திருக்கிறது. வாக்குக் கேட்டு எல்லா அரசியல் கட்சிகளும் களத்தில் இறங்கிப் பம்பரமாகச் சுழன்று கொண்டிருக்கின்றன. அவர்களுக்குச் சற்றும் குறைவில்லாது தேர்தல் ஆணையமும் தமிழ்நாடு முழுவதும் பறக்கும் படைகளைக் களமிறக்கிச் சோதனைகளை நடத்தி வருகிறது. அதில் சாமானிய மக்களே...













