‘இப்போதில்லையேல் இனி எப்போதும் இல்லை’ என்று எச்சரித்து, பாகிஸ்தான் என்ற பெயரை முன்மொழிந்தது ஒரு நான்கரை பக்கத் துண்டுப்பிரசுரம். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்துக்கொண்டிருந்த சௌத்ரி ரஹமத் அலி 1933இல் எழுதியது. அதில் பஞ்சாப் (P), ஆஃப்கனிஸ்தான் (A), காஷ்மீர் (K), சிந்த் (S)...
Tag - இந்தியா200
1979ஆம் ஆண்டு, பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான ஆணையம் தனியாக உருவாக்கப்பட்டது. இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 340இன் கீழ் அது அமைக்கப்பட்டது. அதன்படி, சமூக ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களது முன்னேற்றத்துக்கான செயல்திட்டங்கள் பரிந்துரைக்கப்படும்...
ஆங்கிலேய அரசின் பிரித்தாளும் கொள்கைக்குச் சிறந்த எடுத்துக்காட்டு வங்காளப் பிரிவினை. 16.10.1905 அன்று வங்காளம் அதிகாரப்பூர்வமாகப் பிரிக்கப்பட்டது. அந்த நாள் துக்க நாளாக அறிவிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானவர்கள் வந்தே மாதரம் பாடலைப் பாடியபடி கல்கத்தாவின் சாலைகளில் அணிவகுத்துச் சென்றார்கள். ஒருங்கிணைந்த...
1876 முதல் 1878 வரை ‘மாபெரும் இந்தியப் பஞ்சம்’ (The Great Indian Famine) தன் கோரத் தாண்டவத்தை ஆடித் தீர்த்தது. இந்தியர்களைக் கொத்துக் கொத்தாகக் கொன்று குவித்தது. அந்தப் பஞ்சம் மட்டும் மக்களைக் கொல்லவில்லை, ஆங்கிலேய அரசின் சர்வாதிகாரக் கொள்கைகளும் மக்களைக் கொன்றன. பிரிட்டிஷ் அரசின்...
இந்தியா, பெரும்பான்மைவாதத்தை வேகமாகத் தழுவிக்கொண்ட பத்தாண்டுகளாக 2007 முதல் 2016 வரையிலான காலகட்டத்தைச் சொல்லலாம். 2008ஆம் ஆண்டு மும்பையில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் இந்தப் போக்கின் முக்கியமான புள்ளி. இருபத்து நான்கு மணிநேரச் செய்திகள் வாயிலாக ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் நுழைந்தது அச்சம்...
1947 முதல் 1956 வரையிலான பத்தாண்டுகள் நவீன இந்தியாவைக் கட்டமைக்க உதவிய மிக முக்கியமான காலகட்டம். சுமார் இருநூறாண்டுக் கால பிரிட்டிஷ் ஆட்சியிடமிருந்து சுதந்தரம் கிடைத்தது. அந்தச் சுதந்தரமும் பாகிஸ்தான் பிரிவினை என்னும் ஆறாத் துயரத்தோடு வந்து சேர்ந்தது. மிகப்பெரிய மக்கள் இடப்பெயர்வும், கட்டுக்கடங்காத...
போர், அரசியல் குழப்பங்கள், அவசரநிலைப் பிரகடனம் என நாட்டின் அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத இடம் இந்தப் பத்தாண்டுகளுக்கு உண்டு. 1975 ஜூன் 25 அன்று இந்தியாவில் அவசரநிலை கொண்டுவரப்பட்டது. அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் முடிவின் பேரில் குடியரசுத் தலைவர் ஃபக்ருதீன் அலி அதிகாரப்பூர்வ அறிவிப்பில்...
உலகப் போரினால் பிரிட்டனின் பொருளாதாரம் மோசமான நிலைக்குச் சரிந்திருந்தது. இந்தியாவை இனியும் காலனியாக வைத்திருப்பது சாத்தியமில்லை என்ற முடிவுக்கு வந்திருந்தார் புதிய பிரிட்டிஷ் பிரதமர் அட்லி. இந்தியாவில் இடைக்கால அரசை அமைக்க முடிவெடுக்கப்பட்டு தேர்தல் நடத்தப்பட்டது. மொத்தமிருந்த 1,585 இடங்களில், 923...
இந்தியா சுதந்தரம் பெற்ற ஆண்டு 1947. அதற்கு அரை நூற்றாண்டு முன்பே நாட்டில் ஆட்சி அமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்று தீர்மானித்தார்கள். அதுதான் 1895ஆம் ஆண்டு உருவான ‘Constitution of India Bill’, அதாவது ஸ்வராஜ் சட்டம். இந்த அரசியலமைப்பு மசோதாவின் ஆசிரியர் யார் என்பது இன்றும் தெரியவில்லை...














