உதுமான், நீ தயாரென்றால் சொல். பூர்ணிமை அன்று வகுப்பைத் தொடங்கலாம். நான் சென்று பாரசீகம் பயின்று வந்திருக்கிறேன் என்று சொன்னார்.
Tag - நாள்தோறும்
கலவர நிலைக்கு மத்தியில் ஓட்டோமானின் புதிய சுல்தானாகப் பதவியேற்றார் அப்துல் ஹமீத். டான்சிமாத் சீர்திருத்தங்களை அப்படியே பின்பற்றி ஆட்சியைத் தொடங்கினார்.
பிரச்சனைகளைக் கவனிக்காமல் கடந்து சென்றால் விரைவில் ஐரோப்பிய ஆதிக்கத்துக்கு உள்ளாவோம் எனப் பயந்தது ஓட்டோமான் அரசு.
சிரியப் பகுதிகள் பெரும்பாலும் தட்டையான சமவெளிகளாக இருந்தன. பாதுகாப்பான மலை அரண்களும் இல்லை. எனவே பிற நாடுகளின் எளிய இலக்கானது சிரியா.
அந்நியர்களே பரவாயில்லை என்ற முடிவுக்கு வெகு சீக்கிரம் வந்தனர் மக்கள். மிதமிஞ்சிய ஊழல்கள் நடந்தன. ஜனநாயகம் என்ற ஒன்று இல்லாமலே ஆனது.













