சார்வஜனிக் சபாவின் செயலாளரான கோகலே விரைவில் ஊரறிந்த தலைவரானார். பல பொதுக்கூட்டங்கள் அவருடைய கம்பீரமான சொற்பொழிவுகளால் அழகுபெற்றன.
Tag - என். சொக்கன்
அரசியல் சட்டத்தின்படி அரசாங்கத்துடன் உரையாடுவது எப்படி என்கிற கலையை அதற்கான நுட்பங்களோடு கோகலேவுக்குப் பயிற்றுவித்தார் ரானடே.
கோகலே தன்னுடைய கூர்மையான ஆராய்ச்சி மற்றும் மொழித் திறனின் உதவியுடன் உருவாக்கியிருந்த அந்த உரை அவர் வாயைத் திறக்காமலேயே அவரைப் பெரிய பேச்சாளராக அடையாளப்படுத்திவிட்டது.
'தான் பேச விரும்புகிற ஒவ்வொரு தலைப்பைப்பற்றியும் அதற்குமுன் வந்துள்ள அனைத்துத் தகவல்களையும் விரல் நுனியில் வைத்திருக்கவேண்டும் என்று கோகலே விரும்புவார்' என்கிறார் ஶ்ரீனிவாச சாஸ்திரி.
சார்வஜனிக் சபாவின் காலாண்டிதழுக்குக் கோகலேதான் ஆசிரியர். ஆனால், ரானடே அவருக்கு ஆசிரியர் என்பதால், கோகலேவின் கட்டுரைகளை நிராகரிக்கிற உரிமை அவருக்கு இருந்தது.
கோகலே பூனா சார்வஜனிக் சபா காலாண்டிதழின் ஆசிரியராக மட்டும் பொறுப்பேற்கவில்லை, ரானடே என்னும் மாபெரும் மனிதருடைய மாணவராகவும் பொறுப்பேற்றுக்கொண்டார்.
புனே நகரில் குடியேறிச் சில ஆண்டுகளுக்குள் இளம் தலைவர்களில் ஒருவராக எண்ணப்படும் அளவுக்குக் கோகலே வளர்ந்ததற்கு காரணம், மகாதேவ் கோவிந்த் ரானடேதான்!
DES வாழ்நாள் உறுப்பினர்களுடைய சம்பளத்தை ஐந்து ரூபாய் உயர்த்தவேண்டும் என்கிற கோரிக்கையை ஆகர்கர் முன்வைத்தார். அதைத் திலகர் எதிர்த்தார். இது ஆகர்கருக்குப் பிடிக்கவில்லை.
கோகலே டெக்கான் கல்விக் கழகத்தில் வாழ்நாள் உறுப்பினராகச் சேர்ந்ததற்கும் ஆகர்கர்தான் காரணமாக இருந்தார். அவருக்கு இதழியல் துறையில் பயிற்சி அளித்து, எழுதவைத்ததும் ஆகர்கர்தான்.
பணம் சம்பாதிப்பதை, சொத்து சேர்ப்பதை ஒரு பொருட்டாக நினைப்பதில்லை என்று தூக்கிப்போட்டுவிட்டு வந்தபிறகுதான் இன்னும் கூடுதலான பணம் அவரைத் தேடி வந்தது.













