2026 மேற்கு வங்கச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பல இடங்களில் தீவிர வன்முறைச் சம்பவங்கள் நடந்துள்ளன. இவற்றில் நான்கு பேர் இறந்துள்ளனர், நூற்றுக்கும். மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பொது இடங்களும், வீடுகளும், கட்டடங்களும் சேதமடைந்துள்ளன. இதன் உச்சகட்டமாக, பாரதிய ஜனதா கட்சியின் மேற்கு...
Tag - இந்தியா
அதிகரித்து வரும் வெப்பநிலையால் இந்தியாவின் பால் உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்படக் கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. பால் உற்பத்தி பாதிக்கப்படும் நிலையில், அதன் விளைபொருள்களான தயிர், நெய், வெண்ணெய், பாலாடைக்கட்டி போன்றவற்றின் உற்பத்தியும் நேரடியாகப் பாதிக்கப்படும். இதனால் பால்பொருள்களின் விலை உயரும்...
2019 ஆகஸ்ட் 5 அன்று ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, லடாக் தனி யூனியன் பிரதேசமாக உருவெடுத்தது. தொடக்கத்தில் இம்மாற்றத்தைப் பொதுமக்கள் உற்சாகத்துடன் வரவேற்ற போதிலும், காலப்போக்கில் லடாக்கின் பிரத்தியேக அடையாளம், நில உரிமைகள் மற்றும் தன்னாட்சி அதிகாரத்தைப்...
கடந்த ஏப்ரல் மாதம் தமிழ்நாடு, மேற்கு வங்காளம், புதுச்சேரி, கேரளா, அசாம் மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. தமிழகத்திலும் மேற்கு வங்காளத்திலும் வரலாறு காணாத அளவுக்கு வாக்குகள் பதிவாகியிருந்தன. கடந்த திங்கள்கிழமை கடுமையான பாதுகாப்புடன் பல்வேறு கட்டங்களாக வாக்குகள் எண்ணப்பட்டு, தேர்தல்...
பஹல்காம் தாக்குதல் நடந்து ஓராண்டு கடந்துவிட்டது. தன் கணவரின் வினய் நர்வாலின் உயிரற்ற உடலருகே தனிமையில் அமர்ந்திருந்த புதுமணப் பெண் ஹிமான்ஷி நர்வாலின் புகைப்படம் இன்றும் இந்தியர்களின் மனச்சாட்சியை உலுக்கிக் கொண்டிருக்கிறது. இந்தத் தாக்குதலுக்கு ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில்...
நெருக்கடி நிலைக் காலத்தில், இந்திய அரசின் வேண்டுகோளை ஏற்று மக்கள்தொகையைத் திறம்படக் கட்டுப்படுத்தின தென் மாநிலங்கள். அதே நேரம் சில வட மாநிலங்களால் இந்திய அரசு நிர்ணயித்த இலக்கை அடைய முடியவில்லை. சரி, ஐந்து விரல்களும் ஒன்றாகவா இருக்கின்றன என்று கடந்து போய்விடலாம்தான். ஆனால், இந்த விஷயத்தை அப்படி...
இந்திய தேசம் முழுக்க நாடி நரம்பு போலப் பரவிக் கிடக்கும் ரயில்வே துறை, சுதந்தரத்துக்கு முன் தனியார் கட்டுப்பாட்டில் இருந்தது. சுதந்தரம் அடைந்த பிறகு 1951 ஏப்ரல் 14 அன்று தேசியமயமாக்கப்பட்டது. ஆக, இந்திய ரயில்வே தேசியமயமாக்கப்பட்டு 75 ஆண்டுகள் ஆகின்ற இவ்வேளையில் அது தேசியமயமாக்கப்பட்டதன் பின்னணி...
இரான் போரினால் ஏற்பட்ட உலகளாவிய எண்ணெய்ப் பற்றாக்குறையைத் திறம்படக் கையாண்டுள்ளது இந்தியா. தன்னுடைய ராஜதந்திர அணுகுமுறைகளின் மூலம் தன் மக்களைப் பாதுகாத்துள்ளது. மற்ற நாடுகளை ஒப்பிடும்போது, இந்திய மக்கள் குறைவான அளவே சிரமங்களை எதிர்கொண்டனர். கடந்த காலத்தில் உக்ரைன் போரினால் ஏற்பட்ட எண்ணெய்ப்...
உலகிலேயே அதிக மக்கள்தொகையைக்கொண்ட நாடான இந்தியா, கடந்த ஏப்ரல் 1ஆம் அன்று மக்கள்தொகைக் கணக்கெடுப்பைத் தொடங்கியது. ஒட்டுமொத்தமாக, இது இந்தியாவின் பதினாறாவது மக்கள்தொகைக் கணக்கெடுப்பு. சுதந்தரத்துக்குப் பின் நடக்கும் எட்டாவது கணக்கெடுப்பு. பத்தாண்டுக்கு ஒருமுறை நடந்துவந்த மக்கள்தொகைக் கணக்கெடுப்பு...
தமிழ்நாடு, அஸ்ஸாம், கேரளா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களும் புதுச்சேரியும் தேர்தலுக்குத் தயாராக இருக்கின்றன. புதுச்சேரி, கேரளா, அசாமில் ஏப்ரல் 9ஆம் தேதியும், தமிழக சட்டசபைக்கு ஏப்ரல் 23ஆம் தேதியும் ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற உள்ளது. மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 23, 29ஆம். தேதிகளில் இரு கட்டங்களாக...














